×

திமுக குதிரை பேரத்தை முன்னெடுத்ததாக நிர்மல்குமார் வடிகட்டிய பொய்யை தெரிவித்துள்ளார்: பரந்தாமன்

 

சென்னை: தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக மீது பழி போடவும் குற்றம் சுமத்தவும் திமுக மீது போலியான குற்றச்சாட்டு கூறுகின்றனர். திமுக முன்னாள் அமைச்சரை தொடர்புபடுத்தி குதிரை பேரம் நடத்துவதாக நாடகம் நடத்துகின்றனர். எடப்பாடியை சந்திக்காமல், அதிமுக அதிருப்தி அணியை விஜய் சந்தித்ததுதான் குதிரை பேரம். அதிமுகவில் ஒவ்வொருவராக பதவி விலகி தவெகவில் இணைவதுதான் குதிரை பேரம். விஜயின் குதிரை பேர அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுக அளித்த குதிரை பேர புகாரின் அடிப்படையில் விஜய்தான் நம்பர் ஒன் குற்றவாளி.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி என்று ஒரு நகைச்சுவையை அரங்கேற்றுகின்றனர். நிர்வாகத் திறனற்ற ஆட்சி அவலங்களை மறைக்க திமுக மீது பழி சுமத்துகின்றனர். பிளாக் டிக்கெட் விற்றவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக வந்துள்ளனர். இது விஜய் சர்க்கார் அல்ல ; குதிரை பேர சர்க்கார் என்பதைதே காட்டுகிறது. திமுக புகாரில் நடவடிக்கை எடுக்காவிடில் உயர்நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக சந்திப்போம்.

Tags : Nirmal Kumar ,Dimuka ,Bharandaman ,Chennai ,Government of Taweka ,
× RELATED சாயப்பட்டறைகள் மூடப்பட்டதன் எதிரொலி...