சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொது செயலாளருமான ஆனந்தை, ராகேஷ் நேரில் சந்தித்து ராஜினாமா செய்வது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதா அல்லது அரசியல் ரீதியான முக்கிய ஆலோசனையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
