×

ஊழல் புகாருக்கு விசிக ஆதாரம் காட்டட்டும்: அமைச்சர் சவால்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உறவினர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இடமாற்றங்களில் தலையிடுவதாகவும், துறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், விசிக துணை பொதுச்செயலாளர் பாலாஜி சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் ராஜீவ், ‘‘என் மீது விசிக சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு தவறானது. அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். குற்றம் சுமத்துவது சுலபம். அதனை நிரூபிக்க வேண்டும். நான் தப்பே செய்யல. உங்கள் முன் (செய்தியாளர்கள்) சிரிச்சுக்கிட்டே தானே நிற்கிறேன். நான் எனது மனதுக்கும், முதல்வர் விஜய்க்கும் நேர்மையாக, உண்மையாக இருக்கிறேன்’’ என்றார்.

Tags : VSC ,Ramanathapuram ,Panaikulam ,Environment and ,Change ,Minister ,Rajiv ,Environment ,Tamil Nadu Pollution Control Board ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து