×

இளையான்குடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

இளையான்குடி, மார்ச் 11: இளையான்குடியில் தேர்தலை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரசாரத்தை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மானாமதுரை தொகுதி இளையான்குடியில், தேர்தல் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். நேற்று இளையான்குடி தாலுகா ஆபிசில் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுக்கும் ஜனநாயக கடமை குறித்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொன்ட கலெக்டர், பின்பு தேர்தல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இளையான்குடி கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் நூறு சதவீதம் வாக்களிப்பது என உறுதிமொழியேற்பும், 100 அடி நீளமுள்ள பதாகையில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, தேர்தல் பிரிவு துனை  தாசில்தார் இளங்கோ, மண்டல துனை தாசில்தார் முத்துவேல் ஆகியோர் கலந்துகொன்டனர்.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை