- YouTube
- அமைச்சர்
- அருண்ராஜ்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- பல்
- மருத்துவமனை
- ஓமந்தூரார் அரசு தோட்டம், சென்னை
- உலக இரத்த தானம் நாள்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக குருதி கொடையாளர் தின நாள் விழிப்புணர்வு உறுதிமொழி அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் ஏற்கப்பட்டு, புதிய இணையதளம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அளவில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கோவையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து ஒரு உயிரிழப்பு நடந்தது. சில பேர் யூடியூப் வீடியோ பார்த்து விட்டு இந்த மாதிரி சிலர் வீட்டில் பிரசவம் பார்க்க முயற்சி செய்கின்றனர். இதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 100% மருத்துவமனைகளில்தான் பிரசவம் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
