×

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் ஜூன் 20ம் தேதி முன்​னாள் முதல்​வர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் பேசிய, திருச்​செந்​தூர் தொகுதி திமுக எம்​எல்​ஏ ​அனிதா ரா​தாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக பேசி​ய​தாக தவெக நகரச் செய​லா​ளர் செல்​வம் ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தார். இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்ற முறையில் பேசியதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Anitha Radhakrishnan ,CM ,Court ,Chennai ,DMK MLA ,Tiruchendur ,Madras High Court ,Chief Minister ,Vijay ,Attur Baguti ,Tiruchendur… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து