×

ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் குறித்த விவரங்களை ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.1.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மொத்த வசூல் 6.5 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.35 லட்சம் கோடியாக இருந்தது. இதில், ஒன்றிய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் முறையே ரூ.37,376 கோடி, ரூ.45,116 கோடி மற்றும் ரூ.52,282 கோடி ஆகும். கடந்த மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடியும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.71 லட்சம் கோடியும் வசூலானது குறிப்பிடத்தக்கது.

Tags : New Delhi ,Union Finance Ministry ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...