ஊத்தங்கரை, ஜூன் 29: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு எளச்சூரை சேர்ந்தவர் வேடியப்பன் (60), கூலி தொழிலாளி. வேடியப்பன் காரப்பட்டில் இருந்து எளச்சூர் நோக்கி டூவீலரில் சென்ற போது, எளச்சூர் அருகே எதிரே வந்த டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேடியப்பன், தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீசார், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.
