- ஆர்எம்டி
- பொறியியல்
- கல்லூரி
- மாநாட்டு விழா
- சென்னை
- 21வது பட்டமளிப்பு விழா
- கவரப்பேட்டை
- ஆர்எம்டி பொறியியல் கல்லூரி
- ஆர்.எம்.கே
- கல்விக்கூடம்
- நிறுவனங்கள்
- துணை ஜனாதிபதி
- ஆர்.எம்.கிஷோர்
- ஆர். ஜோதி நாயுடு
- செயலாளர்...
சென்னை: கவரப்பேட்டை ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. சென்னை அடுத்த கவரப்பேட்டை ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், இயக்குநர் ஆர்.ஜோதி நாயுடு, செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர் துர்காதேவி பிரதீப், அறங்காவலர் திசௌம்யா கிஷோர், ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி.மனோகரன், டீன் கே.கே.தியாகராஜன் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் என்.அன்புசெழியன் வரவேற்றார். நிறுவனர் மற்றும் தலைவர் வித்யா ரத்னா ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது: மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளை அடைந்து பெற்றோர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் ஒழுக்கமும் முக்கிய காரணம்.
இந்த ஆண்டு பட்டம் பெறும் மாணவர்கள் 95.33 சதவிகிதம் என்ற சிறப்பான தேர்ச்சி விகிதத்தையும், 87.15 சதவிகிதம் வேலைவாய்ப்பு சாதனையையும் பெற்றிருப்பது பெருமைக்குரியது. மேலும் சிஎஸ்பிஎஸ் துறையைச் சேர்ந்த எஸ்.கோகுல் தர்ஷன் ஆண்டுக்கு ரூ.22.67 லட்சம் ஊதியத்துடன் கூடிய மிக உயர்ந்த வேலைவாய்ப்பைப் பெற்று, கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் டி.தனராஜ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 510 மாணவர்களுக்கு பட்டங்களையும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 28 மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் வழங்கி வாழ்த்தினார். அவர் பேசுகையில், ‘‘இக்கல்லூரியை தேர்வு செய்தது மாணவர்களின் சரியான முடிவு. கற்றறிந்த அறிவை பணியிடங்களில் திறம்பட பயன்படுத்துவதோடு, மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப தொடர்ந்து அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தங்களின் சவுகரிய வட்டத்திலிருந்து வெளியே வந்து, குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை அமைத்து, திட்டமிட்ட ஆபத்துகளை ஏற்று, வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றார். விழாவில் எச்சிஎல் நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் டி.பிரின்ஸ் ஜெயக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், ‘‘செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப தங்களின் அறிவை திறம்பட பயன்படுத்த வேண்டும்.
மாறிவரும் உலகிற்கு ஏற்ப தங்களின் திறமைகளையும் அறிவையும் மேம்படுத்தி, ஏஐ – ஐ திறம்பட பயன்படுத்தி முன்னேற வேண்டும். மேலும், தகவல்களை வேகமாக செயலாக்கும் திறன் ஏஐ க்கு இருந்தாலும், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, நெறிமுறைகள் மற்றும் மனிதநேயம் போன்ற பண்புகளை அது மாற்ற முடியாது. மனித அறிவையும் ஏஐ யையும் இணைத்து தொடர்ந்து கற்றுக்கொண்டு புதுமைகளை உருவாக்கினால், சிறந்த தொழில் வெற்றியையும், சமூக முன்னேற்றத்தையும் அடைய முடியும்’’ என்றார்.
