×

வடகிழக்கு பிரான்ஸில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி

பிரான்ஸின் நான்சி (Nancy) நகருக்கு அருகிலுள்ள டோம்ப்லைன் (Tomblaine) பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதிக்க பயிற்சி தரும் நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியது. விமானி மற்றும் 10 பயணிகள் (ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்றுவிப்பாளர்கள்) என அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திலிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், விபத்தை நேரில் பார்த்தவர்களுக்கும் உதவ மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவுக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் செவிலியர் பயிற்சி மாணவர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட இந்த விமானம், கிழக்கு பிரான்ஸில் உள்ள நான்சி-எஸ்ஸி (Nancy-Essey) விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகிலுள்ள புல்வெளிப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடம் குடியிருப்புப் பகுதி மற்றும் இரண்டு சாலைகளுக்கு மிக அருகில் உள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தச் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Tags : northeastern France ,Tomblaine ,Nancy, France ,
× RELATED திமுக தயாராக இருக்க வேண்டும்; எந்த...