×

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தண்டராம்பட்டு, மார்ச் 10: திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணாயாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்து. தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 88 ஏரிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப்நந்தூரி, கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக நேற்று முதல் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர் பங்கீட்டு விதிகளின்படி வரும் 28ம் தேதி வரை 1,200 மில்லியன் கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sathanur Dam ,Tirukovilur ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...