கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி என்ற இடத்தில், சென்றுகொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காருக்குள் இருந்த குழந்தை உட்பட 3 பேர் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினார். காரை முறையாகப் பராமரிக்காததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
