×

சீனாவில் மிக உயரமான கட்டிடம் மீது மோதிய விமானம்

பீஜிங்: சீனாவில் மிக உயரமான கட்டிடம் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதால் பயணிகள் அச்சமடைந்தனர். சீன தலைநகர் பீஜிங்கில் சிட்டிக் டவர் என்ற மிக உயரமான வணிக கட்டிடம் உள்ளது. 1,732 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தின் மீது நேற்று மாலை 6 மணிக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் யாருக்கும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை. ஆனால் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கட்டிடம் முழுவதும் சிதறி கிடந்தன. இந்த விபத்து தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில் உடனே நீக்கப்பட்டன. மேலும் விபத்து குறித்து சீன அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியும் வௌியிடவில்லை.

Tags : China ,Beijing ,City Tower ,
× RELATED வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்வு