×

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயனடைய வாய்ப்பு: கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அழைப்பு

 

கரூர், ஜூன் 26: கரூர். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் இதர 15 நலவாரியங்கள், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்கள் உள்ளன. அவற்றில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்களின் தொழிலின் அடிப்படையில் உரிய நலவாரியங்களின் கீழ் உறுப்பினராக பதிவிற்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களுடைய பதிவு விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அவர்களால் இணையதளத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஒப்புதலுக்கு பின்னர் அருகிலுள்ள இ.சேவை மையங்கள் அல்லது CSC மையங்களில் https://tnuwwb.tn.gov.in/users/login அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி வீட்டுவசதி திட்டம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் போன்ற நிதியுதவிகள் கோரி https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டு நிதியுதவி தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் வகையை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.750/- முதல் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரை நிதியுதவி தொகைகள் தொழிலாளர் நலவாரியங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அலுவலக தொலைபேசி எண். 04324-220330 என்ற எண்ணிலோ அல்லது ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கட்டிடம். 234 B சன்னதி தெரு. வெண்ணெய் மலை, மண்மங்கலம் வட்டம், கரூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Construction Workers Welfare Board ,Karur District ,Commissioner ,Karur ,Manuj Shyam Shankar ,Tamil Nadu Construction Workers Welfare Board ,Labour Welfare Department ,Tamil Nadu ,
× RELATED அண்ணா நகர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி