×

கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே பாதாள சாக்கடைப்பணி மந்தம்

 

கரூர், ஜூன். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் மார்க்கெட் அருகே நடைபெற்று வரும் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மற்றும் இனாம்கரூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும், சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் அமைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கரூா மாநகராட்சிக்குட்படட காமராஜ் மார்க்கெட் பகுதியை ஒட்டி ரயில்வே நிலையம் செல்லும் சாலையோரம் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளுக்கான குழாய்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இந்த பணியின் தாமதம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பகுதியின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.எனவே, அனைவரின் நலன் கருதி இந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kamaraj Market ,Karur ,Karur Corporation ,Inamkarur ,Karur Corporation.… ,
× RELATED கரூர் -கோவை சாலையில் கால்நடைகள் நடமாட்டம்