×

எஸ்ஐஆர் பணியின்போது வன்முறை காங்கிரஸ் தலைவர் கைது: என்ஐஏ நடவடிக்கை

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் கடந்த திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின்போது, மால்டா மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி பயங்கர வன்முறை வெடித்தது. மேலும், அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ, மோத்பாரி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சயேம் சவுத்ரி என்ற பாபு சவுத்ரியிடம் நேற்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட சயேம் சவுத்ரி மால்டா மாவட்டம் மோத்பாரி சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,SIR ,NIA ,New Delhi ,Trinamool Congress ,West Bengal ,Malda district ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...