×

எஸ்ஐஆர் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் செல்லும்: தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: ‘பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல’ என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்) பாஸ்போர்ட்டை ஆவணமாகப் பயன்படுத்த முடியுமா என்ற சர்ச்சை எழுந்தது.

இந்நியைில், தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போதும், வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், தக்கவைக்கவும் சமர்ப்பிக்க வேண்டிய 12 முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பாஸ்போர்ட் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான ஆவணங்களில் ஒன்றாக பாஸ்போர்ட் தொடர்ந்து நீடிக்கிறது; இதில் எந்த மாற்றமும் இல்லை. வாக்காளர் பதிவு அதிகாரி குறிப்பிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே, வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம்பெறத் தகுதியானவரா என்பதை முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.

Tags : Election Commission ,New Delhi ,Union government ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...