×

கரூர் -கோவை சாலையில் கால்நடைகள் நடமாட்டம்

 

கரூர், ஜூன். 25: கரூர் கோவை சாலையில் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக விபத்து சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனை முற்றிலும் கட்டுப்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோவை சாலையில் திருக்காம்புலியூர் பகுதியில் இருந்து தாராபுரம் பகுதிக்கு சாலை பிரியும் வரை சாலையின் மையப்பகுதியில் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான போக்குவரத்து நடைபெறும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலர் வளர்க்கும் ஆடு போன்ற கால்நடைகள் சாலைகளின் குறுக்கே செல்வதோடு, ஒய்வுக்காக சென்டர்மீடியன்களின் அருகில் ஒய்வு எடுக்கின்றனர். அவ்வாறு ஓய்வு எடுக்கும் கால்நடைகள் திடிரென சாலையின் குறுக்கே செல்லும் போது, எதிர்பாராத வகையில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர், சென்டர்மீடியனை ஒட்டி கால்நடைகள் ஒய்வு எடுப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் கால்நடை வளர்ப்போர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

 

Tags : Karur-Coimbatore road ,Karur ,Karur-Coimbatore ,Thirukampuliyur ,Tarapuram ,
× RELATED கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே பாதாள சாக்கடைப்பணி மந்தம்