×

சோனா சில்க்ஸ், சிஇஓ ஆபிசில் மகளிர் தின விழா


நெல்லை, மார்ச் 10: வண்ணார்பேட்டை சோனா சில்க்ஸ் அன்ட் ரெடிமேட்சில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சோனா வளாகத்தில் மகளிர் ரங்கோலி போட்டி நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு பட்டுச்சேலை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்காக 7 உருப்படிகள் சேர்த்து சிறப்பு ஆபர்களும் வழங்கப்படுகிறது. இதேபோல் நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்  உலக மகளிர் தின விழா நடந்தது. முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினார். பெண் அலுவலர்கள் அனைவரும் ஒரே சீருடையில் வந்திருந்தனர். சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். நேர்முக உதவியாளர் டைட்டஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Sona Silks ,Women's Day ,'s Office ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்