* சித்தூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி
சித்தூர் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு சித்தூர் போக்சோ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2014ம் ஆண்டு மே 5ம் தேதி காலை 8.30 மணியளவில் பயிற்சி மையத்திற்கு செல்ல சதும் மண்டலம், குட்டமிடபள்ளி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, குட்டமிடபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான வகல்லா மோகன் ரெட்டி(34) என்பவர் ஆட்டோவில் வந்தார். சிறுமியிடம் பயிற்சி மையத்திற்கு தான் ஆட்டோவில் அழைத்து செல்வதாக கூறினார்.
இதனை நம்பி ஆட்டோவில் ஏறிய சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னைத் திருமணம் செய்துகொள்வேன் என கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் முகத்தில் ஆசிட் ஊற்றி, கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலையா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வகல்லா மோகன் ரெட்டியை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சித்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.
இருதரப்பு வாதங்களை விசாரித்த மாவட்ட தலைமை நீதிபதி அருணா சாரிகா குற்றவாளியான வகல்லா மோகன் ரெட்டிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
