×

நாகை அரசு கல்லூரி முன்பு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 24: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சார்பில் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் கல்லூரி வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு எஸ்எப்ஐ மாவட்ட தலைவர் முகேஷ்ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட செயலாளர் முகேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார். மாநிலகுழு உறுப்பினர் புவனேஸ்வரி கோரிக்கைளை விளக்கி பேசினார். கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு என்ற பெயரில் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க தலைவர்கள்மீது அடுக்குமுறையை கையாண்ட தமிழக காவல் துறையை கண்டிப்பது. இதற்கு காரணமான தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கல்லூரி வாசல் முன்பு மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Indian Students Union ,Nagapattinam Government College ,Nagapattinam ,Nagapattinam Government Arts and Science College ,Union government ,NEET ,
× RELATED சீர்காழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்