×

வாலிபரை அடித்து கொன்று கிணற்றில் சடலம் வீசிய கும்பல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூரில் கடந்த 21ம் தேதி இரவு கெங்கையம்மன் திருவிழா நடந்தது. இத்திருவிழாவில் வண்டறந்தாங்கலை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், கல்புதூரைசேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திருவிழா முடிந்த பின்னர், அதேபகுதியில் உள்ள சுந்தரியம்மன் கோயில் அருகே மைதானத்தில், கல்புதூர் இளைஞர்கள் இருந்துள்ளனர். அப்போது வண்டறந்தாங்கலைச் சேர்ந்த இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, பாட்டில், தடிகளை கொண்டு வந்து தாக்கியுள்ளனர்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கல்புதூரைச் சேர்ந்த சிவா என்பவரது மகன் தினகரன்(21), தனியார் கம்பெனி ஊழியர் மட்டும் தனியாக சிக்கியுள்ளார். அவரை வண்டறந்தாங்கலைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களால் சரமாரியாக முகத்தில் தாக்கிவிட்டு, தப்பியோடியதாக தெரிகிறது. அதன்பின் தினகரனை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் காட்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, தினகரனை வண்டறந்தாங்கலைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் துரத்தி செல்வது தெரிந்தது. அதன்படி வண்டறந்தாங்கலை சேர்ந்த நவீன்(23), ஜீவா(21), சக்திதரன்(24), சசிகுமார்(27), கல்புதூர் நரசிம்மன்(19) உட்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள வண்டறந்தாங்கலைச் சேர்ந்த கவுதம் என்பவரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மாயமான தினகரனையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், நேற்று மாலை கல்புதூரில் உள்ள கிணற்றில் தினகரனை சடலமாக போலீசார் மீட்டனர். சடலத்தின் முகத்தில் காயங்கள் இருந்தது. எனவே, அவரை கும்பல் அடித்து ெகாலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கைதானவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kengayamman Festival ,Kalputur ,Khadpadi, Vellore district ,Vandarandangala ,Sundaryamman ,Temple ,
× RELATED புதுகை அருகே மின்தடை நேரத்தில் வீடு...