×

செபி விசாரித்த பின் ரூ.15 லட்சம் கோடி வருவாய் நிறுவனத்தில் ஈடி ரெய்டு

புதுடெல்லி: பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.15 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை நடத்தியது. இதில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்சின் நேரடி வருமானம் குறைவாக இருந்தாலும், அதன் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் பெரும் வருவாயை ஈட்டியது கண்டறியப்பட்டது.

இதனால் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் மேத்தா மறுஉத்தரவு வரும் வரை நிறுவன பங்குகளை வாங்க விற்க செபி தடை விதித்தது. இந்நிலையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags : ED ,SEBI ,New Delhi ,Securities and Exchange Board of India ,Bengaluru ,Rajesh Exports ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...