×

பலாக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்:
*பலாக்காய் – 250 கிராம்
*பாசுமதி அரிசி – ஒன்றரை கப்
*வெங்காயம் -2
*தக்காளி -1
*இஞ்சி, பூண்டு விழுது ஒன்றரை ஸ்பூன்
*தயிர் அரை கப்
*பச்சை மிளகாய் – 3
*புதினா – கால் கப்
*கொத்துமல்லி – கால் கப்
*பிரியாணி மசாலா – ஒன்றரை டேபில் ஸ்பூன்
*மிளகாய் துாள் – 1 ஸ்பூன்
*பட்டை, லவங்கம் – சிறிதளவு
*ஏலக்காய் – ஐந்து
*பிரியாணி இலை – இரண்டு
*நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு
*உப்பு சுவைக்கு தேவையான அளவு
*மஞ்சள் துாள் – அரை ஸ்பூன்

செய்முறை:
*முதலில் அரிசியை கழுவி, 20 நிமிடம் ஊற வைக்கவும். பலாக்காயை தோல் நீக்கி, உட்புற சதையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இதில் மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து, தேவையான அளவில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் பட்டை, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
*இந்த தாளிப்பில் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதன்பின் இதில் மிளகாய் துாள், மஞ்சள் துாள், பிரியாணி மசாலா, தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
*பின், மசாலாவில், ஏற்கனவே வேக வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அரிசியை சேர்க்கவும். ஒன்றரை கப் அரிசிக்கு, இரண்டரை கப் அளவில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
*புதினா, நறுக்கிய கொத்துமல்லியை துாவி, குக்கரை மூடவும். மிதமான தீயில் வைத்து, இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் அடங்கியதும் வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Tags :
× RELATED ஆந்திர மாங்காய் வேர்க்கடலை சட்னி