×

அமெரிக்கன் பான் கேக்

தேவையானவை:

மைதா – 1 கப்
பால் – 1 கப்
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா – தலா ½ டீஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – ¼ கப்
தேன் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பவுலில் (தேன், நெய் தவிர) அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்து, 10 நிமிடம் வைத்திருக்கவும். தவாவில் ஒரு கரண்டி மாவினை ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு நெய்விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். சாப்பிடும் போது பான் கேக்கின் மேல் சிறிதளவு தேன் தடவி சாப்பிடவும்.

Tags :
× RELATED ஆந்திர மாங்காய் வேர்க்கடலை சட்னி