திருப்பூர், ஜூன் 23: திருப்பூர் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (24). விசைத்தறி தொழிலாளியான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால், சில நாட்களாக பிரகாஷ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
