×

ராகுல் காந்தி குறித்து விமர்சனம்; அவதூறு பரப்பும் அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு புது பதவி: காங். கடும் தாக்கு

 

ஸ்ரீ விஜயபுரம்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஒன்றிய அரசு ரூ.81,000 கோடியில் கொண்டு வரும் கிரேட் நிக்கோபார் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். இந்த பயணத்தின்போது ராகுல் ஸ்கூபா டைவிங் செய்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதற்காக ரூ.26 கோடி செலவிடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் நேற்று பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ‘‘அந்தமானில் ராகுல் காந்தி மேற்கொண்ட ஸ்கூபா டைவிங்கிற்கு ரூ.26 கோடி செலவானது என்பது அபத்தமானது. தொடர்ந்து தவறான தகவல் பரப்புவ தை பார்த்தால் கிரண் ரிஜிஜு ‘அவதூறு பரப்பும் அமைச்சர்’ என புதிய பதவியேற்றிருப்பதாக தோன்றுகிறது’’ என கூறி உள்ளார்.

Tags : Rahul Gandhi ,Kiren Rijiju ,Congress ,Sri ,Vijayapuram ,Lok Sabha ,Andaman ,Nicobar Islands ,Great Nicobar ,Union government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து