×

மே.வங்கத்தில் பாஜ அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: ஒரு லட்சம் பணி நியமனம், அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தில் மாநில பாஜ அரசு நேற்று தனது முதல் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தது. பட்ஜெட்டை நிதியமைச்சர் ஸ்வயன் தாஸ்குப்தா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ரூ.8.15லட்சம் கோடி கடன் சுமையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு நிதி ஒழுக்கம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமாகும் ஊழலற்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அம்சமாகும். நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் ”என்றார். மேலும் அரசு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் பல கட்டங்களாக நிரப்பப்படும். காவல்துறையில் 20 ஆயிரம் பணியிடங்களும், பள்ளிகளில் 50ஆயிரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அடங்கும். இந்த பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் அன்னபூர்ணா யோஜனா திட்டத்துக்கு ரூ.36ஆயிரம்கோடி ஒதுக்கியுள்ளது. இது முன்பு அமலில் இருந்த லஷ்மிர் பண்டார் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஒருகோடி பெண்கள் மட்டுமே பயன்பெறுவார்கள். இது முந்தைய திரிணாமுல் அரசில் திட்டத்தின் கீழ் இருந்த சுமார் 2.4கோடி பயனாளிகளின் எண்ணிக்கையை விடக் கணிசமாக குறைவாகும்.

Tags : BJP government ,West Bengal ,Kolkata ,Mamata Banerjee ,Trinamool Congress ,BJP ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...