×

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க ஆபத்தான தொழிற்சாலைகளை குழு அமைத்து உடனே ஆய்வு: முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்சோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில், ice flakes generator machine-க்கு செல்லும் பைப்லைன் வால்வில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றும், அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 பேர் (70 பெண்கள் 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 15 பேர் அரசு மருத்துமனையிலும், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பலியானார் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, இயக்குநர், பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் – செயலர் ஆகியோர் குழு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, ஆபத்தான தொழிற்சாலைகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கெல்லாமா மேஜையை தட்டுவது?
சட்டப்பேரவையில் நேற்று, சென்னை அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 5 பேர் இறந்தது தொடர்பாக 110வது விதியின் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் பேசினார். அப்போது, \\”இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு முதல்வர் விஜய் மிகவும் வேதனை அடைந்தார்\\” என்று கூறினார். அப்போது துணை சபாநாயகர் ரவிசங்கர் உள்ளிட்ட சில தவெக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி பாராட்டினர். அப்போது, துணை சபாநாயகர் அருகில் இருந்த ஒரு எம்எல்ஏ, ‘இதற்கெல்லாம் மேஜையை தட்டக்கூடாது’ என்று தடுத்தார்.

இது நேரடி ஒளிபரப்பில் பொதுமக்கள் அனைவரும் பார்த்து, முகம் சுழித்தனர். ஒரு விபத்தில் பலர் இறந்துள்ளனர். அந்த சம்பவம் குறித்து அமைச்சர் பேசும்போது, ‘முதல்வர் வேதனை அடைந்தார், ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்’ என்று சொல்லும்போது கூடவா மேஜையை தட்டி வரவேற்க வேண்டும். இதை, அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பார்த்தால் அவர்கள் மனது எவ்வளவு வேதனைப்படும் என்று சமூகவலைதள பதிவில் வைரல் ஆகி வருகிறது.

Tags : Minister ,Mohammad Parvez ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Tiruvallur district ,Labor ,Kannikaiper ,Periypalayam, Uthuksottai taluk ,Tiruvallur district… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து