×

3 அமைச்சர்கள் பங்கேற்ற மருத்துவ கல்லூரி விழாவில் தவெக, விஜய் பாடலுடன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர் பவன்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், இளநிலை மருத்துவ படிப்பை முடித்த 148 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதே போல் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில், மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களது பட்டங்களை பெற மேடை நோக்கி வந்தபோது திடீரென, தவெகவின் அரசியல் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் ஒலிபரப்பானது.

இந்த பாடல்களின் பின்னணி இசையோடு, மாணவர்கள் தங்களது பட்டங்களை பெற்றுச்சென்றனர். ​இது அங்கு இருந்த பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே விவாதங்களையும், கடுமையான விமர்சனங்களையும் கிளப்பி உள்ளது.

தற்போதைய அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘சினிமா மாடல்’ அரசை நடத்தி கொண்டு இருப்பதால் தான், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களில் கூட இதுபோன்ற செயல்கள் அரங்கேறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு ஒரு அரசியல் கட்சியின் பாடலை ஒலிக்க விட்டது மருத்துவத்துறையின் மாண்பை கெடுக்கும் செயல் என பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Daveka ,Vijay song ,College ,Goa State Medical College ,Tamil Nadu ,Health Minister ,Arunraj ,Minister ,Social Welfare ,Sampatkumar ,Alcohol Exclusion and Preparedness ,Vignesh ,District ,Collector ,Bhavankumar ,Dean ,Government Medical College Hospital ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து