×

மாமல்லபுரத்தில் உலக யோகா தின விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மாணவர்களுடன் பயிற்சி

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஒன்றிய தொல்லியல் துறை சார்பில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நேற்று காலை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் இணைந்து யோகாசன பயிற்சி விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதை தொடர்ந்து, அமைச்சர் எல்.முருகனுடன் தொல்லியல், வருவாய்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர், யோகா பயிற்றுனர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து, யோகாசன பயிற்சிகளில் ஈடுபட்டனர். பின்னர், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: யுனெஸ்கோவின் விருது பெற்ற மாமல்லபுரத்தில் 12ம் ஆண்டு யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஐ.நா.வில் பிரதமர் மோடி, உலகளவில் இந்த யோகாசன கலையை கொண்டு செல்லும் தீர்மானத்தை முன்வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளவில் 130 நாடுகளிலிருந்து கிட்டதட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆரோக்கியமான வாழ்வு என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகள் சரியாவதற்கு, நாம் அனைவரும் நாள்தோறும் யோகாசன பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்த யோகாசன பயிற்சிகளை நம் வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : World Yoga Day ,Mamallapuram ,Union Minister ,L. Murugan ,Chennai ,International Yoga Day ,Mamallapuram Beach Temple ,Union Archaeological Department ,Union Minister of State ,L. Murugan… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து