×

மமக மாநில அமைப்பு செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார்

சென்னை: மமக மாநில அமைப்பு செயலாளர் ஷேக் முகமது அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார். மமக மாநில அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர் வழக்கறிஞர் புழல் ஷேக் முகமது அலி. இவர் அக்கட்சியில் இருந்து விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார். அவரை தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகதீன் சால்வை அணிவித்து வரவேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

ஐயுஎம்எல்லில் இணைந்த புழல் ஷேக் முகமது அலி அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே இஸ்லாமிய கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான். தனிச் சின்னம், தன்மானம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு அரசியல் பயணத்தை வெற்றி பயணமாக முன்னெடுத்து வரும் கே.எம்.காதர் மொகிதீனின் தலைமையை மேலும் வலிமைப்படுத்தவே எளிய தொண்டனாக ஐயூஎம்எல் இணைகிறேன்.

2026 தவெக ஆட்சி அமைத்ததும் விஜய் முதல்வர் ஆனதும் காதர் மொகிதீன் தலைமையிலான ஐயூஎம்எல் தான் காரணம். தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதும் போது ஐயூஎம்எல் பெயர் இல்லாமல் யாரும் வரலாறு எழுத முடியாது. அதேபோல் இனி தமிழ்நாட்டில் ஐயூஎம்எல் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. காயிதே மில்லத் காட்டிய வழியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கை வழியில் உறுதியுடன் பயணிப்பதற்காக, எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : State ,Organization ,Union Muslim League of India ,Chennai ,Sheikh Mohammed Ali ,Union Muslim League Party of India ,Shaykh Mohammed Ali ,Great State Organization ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து