- முருகன்
- திருமலா
- சுப்ரமணிய சுவாமி கோவில்
- பாம்பனூர், ஆத்மக்குரு மண்டலம், அனந்தபுரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
திருமலை: ‘மாமியார் தொல்லை தாங்க முடியவில்லை, அவர் விரைவில் சாகும்படி செய்யுங்கள் முருகா’ என்று ரூபாய் நோட்டில் பக்தர் ஒருவர் எழுதி காணிக்கையாக செலுத்தியுள்ளார்.ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஆத்மக்கூர் மண்டலம், பம்பனூரில் உள்ள சுப்ரமணிஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக பிரித்து எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ரூ.20 நோட்டில் எழுதி வைக்கப்பட்ட வேண்டுகோள் கண்டெடுக்கப்பட்டது.
அதில், ‘சுவாமி என் அத்தையின் (மாமியார்) தொல்லை என்னால் தாங்க முடியவில்லை. அவர் விரைவில் சாகும்படி செய்யுங்கள் முருகா’ என்று தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது. இந்த விசித்திரமான வேண்டுகோளை பார்த்த அதிகாரிகள் மற்றும் காணிக்கை எண்ணும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ரூ.20 நோட்டு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
