வெலிங்டன் ராணுவ மையத்தில் போர் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி

குன்னூர், மார்ச் 9: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் போர் நினைவு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1971ம் ஆண்டு நடந்த போரின் வெற்றி மற்றும் துணிச்சலை நினைவு கூறும் வகையில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் என்ற பொன் விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான நினைவு ஜோதி வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.  2021 டிச.16ம் தேதி அன்று 50வது ஆண்டு விழா என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ நாகேஷ் பாராக்ஸில் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் ஜோதியின்  பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஜோதியை பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் ஸ்டேஷன் கமாண்டர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், முன்னாள் ராணுவ ஊழியர்களின்  துணை தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில், மூத்த போர் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கலந்து கொண்ட போர் வீரர்கள் தங்களது அனுபவங்களை ராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Related Stories: