×

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரவி தனது மனைவி முத்துலட்சுமி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் காரில் திருச்செங்கோடு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சங்ககிரி அருகே எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

ஆபத்தான நிலையில், அவர்களை மீட்ட பொதுமக்கள் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரவி உயிரிழந்தார். இதனிடையே விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்ககிரி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நரப்பஞ்சாவடி பகுதியில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு இருவழி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளதே விபத்துகள் அதிகமாக நிகழ காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.

Tags : Sangakiri ,Salem district ,Salem ,Ravi ,Erode district ,Thiruchengode ,Muthulakshmi ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காரும்,...