×

ரூ.11,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தூத்துக்குடி: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது தாத்தா மாடன் பெயரில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள 3.75 சென்ட் நிலத்தை கூட்டு பட்டாவாக மாற்ற கடந்த மாதம் நவநீத கிருஷ்ணன் மனைவி மாதாசெல்வி விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் விஏஓ செந்தில்குமாரை(48) சந்தித்து மாதாசெல்வி கேட்டபோது ரூ.11 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதலில் ரூ.2 ஆயிரம் மட்டும் கொடுத்தவர் மீதி ரூ.9 ஆயிரத்தை விஏஓ செந்தில்குமாரின் தனி உதவியாளர் சுப்பையாவிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ, உதவியாளரை கைது செய்தனர்.

Tags : VAO ,Thoothukudi ,Navaneetha Krishnan ,Gangaikondan Thuraiyur ,Nellai district ,Mata Selvi ,Naththanendal ,Madan ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை