திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில அளவைக்கு சர்வேயர் செல்வராஜை (35) தொடர்பு கொண்டபோது ஒரு பிளாட்டிற்கு ரூ.7,000 வீதம் 2 பிளாட் அளவீடு செய்வதற்கு ரூ.14,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் பாலமுருகன் புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.14,000-ஐ நேற்று மதியம் பாலமுருகன், சர்வேயர் செல்வராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
