- Maji
- சட்டமன்ற உறுப்பினர்
- தவேகா
- தர்மபுரி
- மஜி எம். எல்.
- தவெகா
- கோவிந்தசாமி
- அத்தமுகா
- பாப்ரெட்டிபட்டி
- தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி: தவெகவில் பத்து நாட்களுக்கு முன்பு இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ, தற்போது அரசியலில் இருந்ேத விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 2 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர் கோவிந்தசாமி. நடந்து முடிந்த தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சென்னை பனையூர் சென்று தவெகவில் இணைந்தனர். அப்போது முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமியும் சென்று தவெகவில் சேர்ந்தார். இந்நிலையில் தற்போது அரசியலை விட்டே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நான் கடந்த வாரம் எனது சூழ்நிலையின் காரணத்தால் வேறு இயக்கத்திற்கு சென்றேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், எனது மனமும், உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் 14ம் தேதி முதல் (நேற்று முன்தினம்) அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். எந்த இயக்கத்திலும் நான் இல்லை. பொது சேவையில் மக்களோடு தொடர்ந்து இருப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தீவிர அதிமுக விசுவாசியான அவர், விஜய் கட்சியில் இணைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்ததே அவரது திடீர் அறிவிப்புக்கு காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
