×

நெதர்லாந்து- ஜப்பான் போட்டி 2-2 என டிரா

 

உலக கோப்பை கால்பந்து தொடரில் 11வது லீக் போட்டியில் குரூப் எப் பிரிவில் டெக்சாஸ் டல்லாஸ் மைதானத்தில் நேற்றிரவு நெதர்லாந்து -ஜப்பான் அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தின் 5வதுநிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் வெர்ஜில்வென் டிஜக் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக 57வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்து சமன் ஏற்படுத்தினார். தொடர்ந்து 64வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடிக்க 2-1 என அந்த அணி முன்னிலை பெற்றது.

இறுதிகட்டத்தில் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜப்பானின் டைசி கமடா கோல் அடிக்க 2-2 என போட்டி டிராவில் முடிந்தது. நெதர்லாந்து அணி உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை முன்னிலை பெற்ற பிறகும் ஒரு போட்டியை வெல்லாமல் தவறவிடுவது இதுவே முதல் முறையாகும். மேலும், உலகக் கோப்பையில் ஆசிய நாடு ஒன்றுக்கு எதிராக நெதர்லாந்து டிரா செய்ததும் இதுதான் முதல்தடவையாகும்.

 

Tags : Netherlands ,Japan ,Dallas Stadium ,Texas ,World Cup football ,
× RELATED பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன்...