காளையார்கோவிலில் எடை குறைவாக பொருட்கள் விற்பனை

காளையார்கோவில், மார்ச் 8:  காளையார்கோவில் தற்காலிக வாரச்சந்தையில் வெளியூர் மற்றும் உள்ளுர் வியாபாரிகள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வந்து வியாபாரம் செய்வார்கள். அவர்கள் பயன்படுத்தும் தராசில் எடை அளவு குறைவாக உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.  காளையார்கோவில் வாரச்சந்தைக்கு உள்ளுரில் இருந்தும் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள். இங்கு மீன், காய்கறி, பழங்கள் என அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன. சில வியாபாரிகள் விற்பனை செய்யும் பொருட்களின் எடை ஒரு கிலோவுக்கு 200 கிராமுக்கு மேல் குறைவாக எடைபோடுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டார்கள், அவற்றில் எடை மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த வாரம் மட்டுமே சரியான அளவில் பொருட்கள் விற்கப்படுகின்றன மறுவாரமே போலி தராசுகளை சிலர் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றார்கள். சமூக ஆர்வலர் திருக்கானப்பேர் டிஎன்கருணாநிதி கூறுகையில், இதுபோன்ற ஆய்வு வெறும் கண்துடைப்பாக உள்ளது. எடை மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து உள்ளார்கள். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: