சிவகாசி, ஜூன் 15:சிவகாசியில் பெண்களை கேலி செய்த மூன்றுவாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சிவகாசி ஏவிடி தெருவில் நின்றிருந்த சில வாலிபர்கள், அங்கிருந்த இளம் பெண்களை கேலி செய்வதாக சிங்கப்பெண் அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிரடிப்படையினர் பெண்களை கிண்டல் செய்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அவர்கள் தப்பிய ஓடியதால் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து, சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிவகாசியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகேந்திரகுமார் என்ற குள்ளமணி (26), செண்பகபாண்டி (25) மற்றும் மகேந்திரன் (27) என்பதும் இவர்கள் மூன்று பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.
