×

சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற சரித்திர பதிவேடு ரவுடி கைது

பெரம்பூர்: சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட புரசைவாக்கம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, தனிப்படை போலீசார் நேற்று ஓட்டேரி பிரிக்ளின் ரோடு பகுதியில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் சிறுசிறு பொட்டலங்களாக சுமார் அரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், ஓட்டேரி எஸ்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (27) என்பதும், இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலனி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,Perambur ,Inspector ,Thompson Xavier ,Secretariat Colony ,Purasaivakkam ,Otteri ,Chennai ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை