- T20 உலக கோப்பை
- பாகிஸ்தான்
- கதாநாயகிகள்
- பர்மிங்காம்
- ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
- இங்கிலாந்து
- பாக்கிஸ்தான்
பர்மிங்காம்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வருகிறது. பர்மிங்காமில் நடைபெறும் 6வது லீக் போட்டியில், குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதற்கு முன் 16 முறை டி20 போட்டியில் மோதியுள்ளன. இந்தியா 13, பாகிஸ்தான் 3ல் வென்றுள்ளன. உலகக்கோப்பையில் இரு அணிகளும் 8 முறை மோதியிருக்கும் நிலையில், 6-2 என இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்புகிறது. இதனிடையே பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: நாங்கள் கிரிக்கெட்டுக்காக இங்கே இருக்கிறோம், கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். கிரிக்கெட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் பேசுவதில்லை. கிரிக்கெட்டைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரியும் என்று கூட நான் நினைக்கவில்லை. முதல் நாளிலிருந்தே கிரிக்கெட் எங்கள் கனவாக இருந்து வருகிறது, நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே விவாதிக்கிறோம்.இன்றைய ஆட்டத்தைப் பற்றி நாங்கள் சிந்திப்பதெல்லாம், ‘இது நாம் விளையாடப் போகும் மற்றொரு ஆட்டம்’ என்பதுதான், என்றார். இதன் மூலம் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
நடப்பு சாம்பியன் நியூசியை வீழ்த்திய வெ.இண்டீஸ்;
குரூப் 2 பிரிவில் சவுத்தாம்டனில் நேற்றிரவு நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷெமைன் கேம்பல் நாட் அவுட்டாக 90 ரன் விளாச 19.5ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வென்றது. முன்னதாக குரூப் 1ல் தென்ஆப்ரிக்காவை 65ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
