×

திருப்பத்தூரில் திடீர் சாலை மறியல் பயிர் கடன் தள்ளுபடி திரும்ப பெற வலியுறுத்தி

திருப்பத்தூர், ஜூன் 12: பயிர்கடன் தள்ளுபடி திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயி மொட்டையடித்து திருவோடு ஏந்தியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொம்மிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் நூதன முறையில் மொட்டை அடித்து நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு திருவோடு ஏந்தி அரை நிர்வாணமாக கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் கூறியதாவது: விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். ரூ.5 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என கூறுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். எனவே தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தபடி 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். பின்னர் அனைத்து விவசாயிகளும் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆகாத அரசாக செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வரும் 22ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடத்தப்படும்’ என கூறினார்.

Tags : Tirupattur ,Tirupattur RTO ,Assistant Commissioner of Excise ,Vediyappan… ,
× RELATED தமிழக- ஆந்திரா வனப்பகுதியில் கழுதை...