- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- மத்திய மேற்கு
- ஆந்திரா
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று (ஜூன் 12) கனமழை பெய்யக்கூடும் வாய்ப்புள்ளது.
