3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா

வேதாரண்யம், மார்ச் 7: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா நடந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த 8ம் தேதி மாசிமக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து 28 நாட்கள் நடந்த மாசிமக உற்சவத்தில் திருக்கதவு அடைக்க திறக்கும் நிகழ்வு தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்ற முக்கிய திருவிழாக்கள் நடந்தது. இந்நிலையில் மாசிமக திருவிழாவின் விடையாற்றி விழா நடந்தது. விழாவில் சந்திரசேகரர் மற்றும் மனோன்மணி சமேதமாய் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>