×

லாலு பிரசாத்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கைகளைப் பாதுகாப்பதில் தாங்கள் தொடர்ந்து காட்டும் உறுதி நாடு முழுவதும் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு ஊக்கமாக விளங்குகிறது. தாங்கள் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,Lalu Prasad ,Chennai ,DMK ,president ,Rashtriya Janata Dal ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து