- முதல் அமைச்சர்
- விஜய்
- கொல்லூர் மூகாம்பிகா கோயில்
- உடுப்பி
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜோசப் விஜய்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா கோயில்
- கர்நாடக
உடுப்பி: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தரிசனம் செய்வதற்கு வசதியாக நடைசாத்தும் நேரம் மாற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இன்று கர்நாடகா மாநிலம் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து இன்று மங்களூருவுக்கு தனி விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலம் சுமார் 140 கிமீ தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.
விஜய் தரிசனம் செய்ய வருவதால் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கோயில் நடை சாத்தும் நேரத்தை விஜய்க்காக கோயில் நிர்வாகம் மாற்றியுள்ளதாக தகவல் பரவியதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இது குறித்து உடுப்பி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிராம் சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘பக்தர்கள் வந்து செல்வதற்கு எந்த தடையும் இல்லை.
இருப்பினும் 2 மணி முதல் 4 மணி வரை என்பது கோவில் நடை சாத்தும் நேரம். அந்த நேரத்தில் விஐபிக்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். 1.30-3.30 வரை மூடுவதற்குப் பதிலாக, 2-4 வரை மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும். எனவே, பொது தரிசன நேரத்தில் எந்த குறையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
