நடவடிக்கை எடுக்க கோரிக்கை தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

தோகைமலை மார்ச்7: தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக மண்டல கமிட்டி மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தோகைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆர்டிமலை விராச்சிலேஸ்வரர் கோவில் அருகே நடந்த கூட்டத்திற்கு பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சந்திரன், காந்தி, தணிகாசலம், வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் குளித்தலை எம்எல்ஏ ராமர் கலந்து கொண்டு பேசினார். மேலும் வரும் 12ம் தேதி அன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்கு கரூர்; வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வரவேற்க செல்வது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

Related Stories:

>