காத்மாண்டு: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதாக புகாரை அடுத்து இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை விதித்தது. நேபாளத்தில் வரத்து குறைவால் மாம்பழங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டது.
நம் நாட்டின் மாம்பழங்கள் இறக்குமதிக்கு கிழக்காசிய நாடான ஜப்பான் சமீபத்தில் தடை விதித்தது. இந்த மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நேபாளமும் இதே முடிவை எடுத்துள்ளது.
எல்லை பகுதிகளில் அவற்றை தனிமைப்படுத்தும் வசதி இல்லாததாலும் இந்த தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மாம்பழங்களுடன் போட்டியிட முடியாமல் திணறிய உள்நாட்டு மாம்பழ விவசாயிகளுக்கு இது ஊக்கம் அளிக்கும். நேபாளத்தின் தேவைக்கு உள்நாட்டு மாம்பழங்கள் மட்டும் போதாது என்றும், வரத்து குறைவால் மாம்பழம் விலை கணிசமாக உயரும் என்றும் வரத்து குறைவால் மாம்பழம் விலை கணிசமாக உயரும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
